சிக்கிய குரல் பதிவுகளால் சிக்கலில் பிரபலங்கள்! ரஞ்சனின் குரல் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்த தீர்மானம்

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட குரல் பதிவுகளில் இலங்கை சமூகத்தில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் பல பெண்கள், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி வாயிலாக பாலியல் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் குரல் பதிவுகள் கிடைத்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பெண்களில் மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலமானவர்களின் மனைவிமார், தனியார், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மட்டுமல்லாது பிரபலமான பெண் கலைஞர்கள் சிலரும் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த தகவல் கசிந்ததை அடுத்து எதிர்க்கட்சியை சேர்ந்த சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் இவ்வாறான குரல் பதிவுகள் வெளியாகினால், எதிர்க்கட்சி மட்டுமல்லாது ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குற்றவியல் விசாரணை திணைக்களம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவை நடத்திய முக்கியமான விசாரணை நடவடிக்கைகளில் ரஞ்சன் ராமநாயக்க தலையீடுகளை மேற்கொண்டாரா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் ஆபாசம் என கருதப்படும் குரல் பதிவுகள் தொடர்பாக இதுவரை எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி

Related Posts

About The Author

Add Comment