யாழ்ப்பாணம் உள்பட நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் நீண்டவரிசை

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.

ஈரானின் இராணுவத் தளபதி சுலைதானை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் கொலை செய்த நிலையில் வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காணப்படுவதால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் தளம்பல் நிலை காணப்படுகிறது.

எனினும் பெரியவில் விலை ஏற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் உள்பட நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் நிரப்புவதைக் காண முடிகிறது.

எரிபொருளை வாங்கி சேமிப்பதற்கு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி இவ்வாறு படையெடுத்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   யாழ் ஆயரிடம் ஆசி பெற்ற வடமாகாண ஆளுநர்

Related Posts

About The Author

Add Comment