பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று காலை குறித்த ஆசிரியரை முன்னிலைப்படுத்தியபோதே எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாடசலையில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்தவகையில், வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

குறித்த ஆசிரியர் தமிழரசு கட்சியின் இளைஞரணியில் அங்கம் வகிப்பதுடன் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வவுனியா நகரசபையின் உபநகர பிதாவாக பதவி வகித்திருந்தார்.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 101 வயது முதியவர் மறைவு

Related Posts

About The Author

Add Comment