யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாள்கள் மீட்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக்தில் பயிலும் மாணவர்கள் யாழ்.பரமேஸ்வராச் சந்தியில் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து இன்று காலை இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இவ் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   காட்டு யானை தாக்கியதில் 6 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு; தந்தை படுகாயம்

Related Posts

About The Author

Add Comment