வரலாற்றில் முதல் முறையாக …சவரன் ரூ.30 ஆயிரத்து 344..! தங்கம் விலை புதிய உச்சம் ..!

 

தங்கம் விலை புதிய உச்சம் ..! வரலாற்றில் முதல் முறையாக …சவரன் ரூ.30 ஆயிரத்து 344..! மக்கள் பெரும் அதிர்ச்சி…! 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி ஒரு சவரன் ரூபாய் 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல், மேலும் மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்ட கணிப்பின் படி, இந்த ஆண்டு சவரன் விலை மேலும் மேலும் உயர்ந்து புதிய உச்சமாக 36 ஆயிரம் ரூபாய் அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கேற்றவாறு திடீரென விலை உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு கிலோ தங்கம் 44 லட்சம் முதல் 45 லட்சம் வரை விலை போகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது இந்த ஆண்டில் மேன்மேலும் உயர பெற்று ஒரு கிலோ தங்கம் 45 முதல் 46 லட்சம் தொட்டால், ஒரு சவரன் விலை 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் செய்கூலி சேதாரம் என சேர்த்து இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால்  34 முதல் 35 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மேலும் ஒரு சவரன் விலை 36 ஆயிரம் ரூபாய் என்ற நிலை அடையுமேயானால் அன்றைய நிலவரத்தில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு சவரன் விற்கப்படும் என்பது கூடுதல் தகவல். இதற்கு முன்னதாக ஒரு சவரன் விலை உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் தேதி 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புத்தாண்டு பிறந்த உடனே அதிரடியாக சவரன் விலை உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். மேலும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கம் வாங்கி ஆக வேண்டும் என்றும் ஆனால் வாங்கக்கூடிய அளவு மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது.

மேலும் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமத்து 57 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்தும் 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்திய நேரப்படி இன்று மாலை அமெரிக்க வர்த்தகம் தொடங்கும் என்பதால் அதன்படி மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் உயரும் என்பதால் 31,000 ரூபாயை கடக்க வாய்ப்பு உள்ளது

இதே போன்று வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 70 காசு உயர்ந்து 51.10 ரூபாய்க்கு விற்கபடுகிறது

 

இதையும் படியுங்க :   தீக்குளிக்கப் போவதை முன்னரே சமூக வலைதளத்தில் வெளியிட்ட விக்னேஷ்!!

Related Posts

About The Author

Add Comment