கவர்ச்சி நடிகையின் தம்பி குடிபோதையில் ரகளை! நள்ளிரவில் தகராறு!

 

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. இவர் என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது சகோதரர் விக்னேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் விக்னேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், விருகம்பாக்கம் அருகே தகறாரில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

 

newstm.in

இதையும் படியுங்க :   எந்திரன் வசூலை பின்னுக்கு தள்ளியதா தெறி?

Related Posts

About The Author

Add Comment