பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! சுவிஸ் அரசின் கோரிக்கையை நிரகரித்த இலங்கை அரசு

 

குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பெண் பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து செல்ல விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

காவல்துறைஅதிகாரி நிசாந்த சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்சென்றதன் பின்னர் இந்த பெண் பணியாளர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் விசாரணையை எதிர்கொள்ளும் சுகநிலையில் இல்லாமைக்காரணமாக பெண் பணியாளர் இன்னும் இலங்கையின் விசாரணையாளர்களிடம் சாட்சியம் வழங்கவில்லை.

இந்தநிலையில் அவரையும் அவரது குடும்பத்தையும் சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்செல்ல சுவிஸ் தூதரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது.

இதற்காக சுவிஸ் தூதரகம் அவசரசேவை விமானம் ஒன்றையும் இலங்கைக்கு வரவழைக்க முயற்சித்தது என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் இந்த விடயம் குறித்து இன்று தினேஸ் குணவர்த்தன விளக்கம் அளித்தார்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப விசாரணைகளுக்கு கூட பிரசன்னமாகாமல் குறித்த பெண் பணியாளரை நாட்டில் இருந்து அழைத்துச்செல்வது உரிய நடைமுறையாகாது.

இது புதிய அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையாகும் என்று எண்ணத்தோன்றுகிறது என்றும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்!

Related Posts

About The Author

Add Comment