4, 13, 22, 31 இல் பிறந்தவர்கள் பலன்

 

4, 13, 22, 31 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 4 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் ராகு. உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

 

குணம்

ராகுவை உங்கள் கிரகமாக கொண்டுள்ளதால் எதையும் பிடிவாதம் பிடித்தது சாதித்துவிட வேண்டும் என்ற குணத்தை கொண்டிருப்பீர்கள். உங்கள் பேச்சில் அனுசரணையை எதிர்பார்க்க முடியாது. பேச்சில் அடக்கமும் இருக்காது. நீங்கள் ஒன்றை அடைய வேண்டும் என்று உங்கள் மனதில் நினைத்து விட்டால் அதை பிறருக்காக விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். அடுத்தவர்களின் முகத்திற்கு முன்னே நீங்கள் பேசும் பேச்சானது மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் இருக்கும். உங்களிடம் பேசும் நபர் பெரிய பணக்காரராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், அந்தஸ்து உள்ளவராக இருந்தாலும் எல்லோரும் உங்களுக்கு ஒன்றுதான். நீங்கள் சொல்வதுதான் சரி என்பதை சாதிப்பீர்கள். உங்கள் குரல் எப்பொழுதும் மேலோங்கியே ஒலிக்கும். பிறர் உங்களுக்கு கூறும் அறிவுரையில் என்னதான் நல்லது இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கு பணத்தின் மீதோ, புகழின் மீதோ ஆசை இருக்காது. நீங்கள் சொல்லும் வார்த்தையை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் நீங்கள், பொதுப் பிரச்சினையில் முன்பாக போய் நிற்பீர்கள். விடாமுயற்சியால் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

தொழில்

நீங்கள் எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உங்கள் முழு முயற்சியால் வெற்றி அடைவீர்கள். அரசாங்கம் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் உயர்ந்த பதவியில் இருந்தால்கூட உங்களுக்கு மேலே உள்ளவர்களுக்கு அடிமைத் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். ஆல்கஹால் கலவைகள் சேர்க்கப்படும் மருந்து விற்பனை செய்பவர்களாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

astrology wheel

உடலமைப்பு

உடல்பருமன் உடையவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும். அழகில் கொஞ்சம் குறைபாடுகள் இருந்தாலும், நன்றாக உழைக்கும் உங்களுக்கு உடல் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். சோர்வு அதிகமாக காணப்படும்.

நண்பர்கள்

எதையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவத்தை கொண்ட உங்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவது என்பது கொஞ்சம் கடினம் தான். கூட்டு எண் 5, 8 இந்த தேதியில் பிறந்தவர்கள் உங்களிடம் நண்பர்களாக இருக்க முடியும். கூட்டு எண் 1, 2, 9 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உங்களிடம் நட்பு வைத்துக்கொள்ள முடியாது.

இல்லற வாழ்வு

Nakshatra

உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கும். இளம் வயதிலேயே உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கும் என்பதால் குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற வித்தையை நீங்கள் கற்றுக்கொண்டு வைத்திருப்பீர்கள். உங்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை அமைதியான சுபாவம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் அதிகமாக வராது.

அதிர்ஷ்ட தேதி -1, 10, 19, 28
அதிர்ஷ்ட நிறம்-மஞ்சள்
அதிர்ஷ்ட திசை-கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை-ஞாயிறு
அதிர்ஷ்ட கல்-கோமேதகம்
அதிர்ஷ்ட தெய்வம்-துர்க்கை

 

இதையும் படியுங்க :   வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்

Related Posts

About The Author

Add Comment