5, 4, 23 இல் பிறந்தவர்கள் பலன்!தெரிந்துகொள்வோமா?

 

5, 14, 23 இந்த தேதிகளில் பிறந்த நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 5 ஆக இருந்தால் உங்களுக்கு உரிய கிரகம் புதன். உங்களின் குணம், தொழில், நண்பர்கள், உடலமைப்பு, இல்லற வாழ்க்கை இவைகளெல்லாம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

astrology wheel

குணம்
எதையும் வெளிப்படையாக பேசாத நீங்கள், எந்த வேலை செய்தாலும் மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற சிந்தனையோடு தான் செயல்படுவீர்கள். உங்களின் வேலைக்கு அடுத்தவர்களின் உதவியை நாடுவீர்கள். ஆனால் எதையும் உடனே புரிந்து கொள்ளும் தன்மையை கொண்டவர்கள் நீங்கள். ஒரு செயலை செய்யும் போது அதற்கான பின்விளைவுகள் என்ன வரும் என்பதை உங்களால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். உங்களைப் பார்க்க எதையும் அறியாதவர்கள் போல் இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, எதையும் அறியாதவர்கள் போல் நடந்து கொள்வீர்கள். ஆனால் உங்கள் காரியத்தை நீங்கள் முடித்துக் கொள்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களை உங்கள் பக்கத்தில் கூட வைத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் தனிமையை விரும்பமாட்டீர்கள். உங்கள் பேச்சானது அடுத்தவர்களை கேலி செய்யும் வகையில் அமைந்திருக்கும். உங்கள் இனிமையான பேச்சின் மூலமாகவே அடுத்தவர்களிடம் இருந்து வேலையை வாங்கிக் கொள்வீர்கள். இவ்வளவு திறமை கொண்ட நீங்கள, உங்கள் மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பத்தோடு தான் இருப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை பொறுப்போடு முடிப்பீர்கள்.

தொழில்

உங்கள் மூளையை அதிகமாக பயன்படுத்தும் அறிவுசார்ந்த தொழிலிலும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது சம்பந்தமான வேலைகளிலும் நீங்கள் இருப்பீர்கள். வங்கி வேலை, கணினி சம்பந்தப்பட்ட வேலைகள் இதில் நீங்கள் சாதனை செய்ய வாய்ப்பு உள்ளது. பத்திரிக்கை, ஜோதிடம், அணு ஆராய்ச்சி இப்படி சிந்தித்து செயல்படும் துறைகளில் ஈடுபடுவீர்கள். உடலை வருத்தி செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றது அல்ல.

numbers

நண்பர்கள்

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தும் உங்கள் பேச்சானது, அதிகமான நண்பர்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உங்களின் கிண்டலான பேச்சால், நீங்கள் அனைவரையும் உங்கள் வசம் வைத்திருப்பவர்கள். கூட்டு எண் 1, 6 இந்த எண்ணில் பிறந்தவர்கள் இடம் நீங்கள் நெருக்கமாக இருக்க முடியும். இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும் தான் உங்களிடம் சகஜமாக பழக முடியாது. மற்றபடி அனைவரும் உங்களிடம் சகஜமாகப் பழகுவார்கள்.

உடலமைப்பு

நடுத்தரமான உயரத்தை கொண்ட நீங்கள் அழகாகத் தான் இருப்பீர்கள். அடுத்தவர்களை ஈர்க்கும் சக்தியானது உங்கள் கண்ணில் இருக்கும். அதிகமாக சிந்திக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரியான நேரத்தில் சாப்பிட்டு உண்பதால் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். வேலைச்சுமை இருந்தாலும் நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் கொண்டுவர வேண்டும்.

numbers

இல்லற வாழ்க்கை

உங்களது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகள் கருத்துவேறுபாடுகள் வந்தாலும் அதனை நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள். எந்த பிரச்சினையும் வராமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு, கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் தனிக் குடும்பமாக இருந்தாலும் அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை இருக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதி -14, 23, 15, 24
அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை, பச்சை
அதிர்ஷ்ட திசை-வடக்கு
அதிர்ஷ்ட கிழமை-புதன்
அதிர்ஷ்ட கல்-மரகதப் பச்சை
அதிர்ஷ்ட தெய்வம்-விஷ்ணு

 

இதையும் படியுங்க :   கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமா?

Related Posts

About The Author

Add Comment