தடைகளை தாண்டி 25,000 மாவீரர்களின் கல்வெட்டு!

யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆயினும் இதற்குத் தடைகள் சில ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அந்தத் தடைகளைத் தாண்டியும் 2500 மாவீரர்களின் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது, ஒலிபெருக்கி பெட்டிகள் (பொக்ஸ்) பாவிக்க அனுமதி பெற வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள். அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும், அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர். எனினும், உயிரிழந்தவர்களின் சொந்தப் பெயர்களை பாவித்தே நினைவஞ்சலி நடத்துவதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன், பொக்ஸ் பாவிக்க அனுமதி பெற தேவையில்லையென ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பொலிசார் விலகி சென்றனர்.

இதனையடுத்து தற்பொது பெருமளலானோர் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இதையும் படியுங்க :   புலிகளின் முன்னாள் திருகோணமலை புலனாய்வு பொறுப்பாளர் கலையரசன் கைது

Related Posts

About The Author

Add Comment