இவ்வளவு அழகான திருநங்கை விமான பணிப்பெண்களா…?

பிலிப்பைன்ஸை சேர்ந்த இரண்டு இளம் வயது திருநங்கைகள் நாட்டின் முதல் விமான பணிப்பெண்களாக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.பிலிப்பைன்ஸில் இந்த வாரம் திருநங்கைகள் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கான உரிமைகளை பேசும் பொருட்டே இது கொண்டாப்படுகிறது.

இந்நிலையில் ஜேஸ் லேபரீஸ் மற்றும் மிகி விடிங் என்ற இரண்டு திருநங்கைகளுக்கு Cebu Pacific என்ற விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்கள் பணி கிடைத்துள்ளது.இதன்மூலம் பிலிப்பைன்ஸில் விமானப்பணிப்பெண்களான முதல் திருநங்கைகள் என்ற பெருமை இருவருக்கும் கிடைத்துள்ளது.இருவரும் மிக அழகாக இருக்கும் நிலையில் அவர்கள் திருநங்கைகள் என விமானத்தில் ஏறும் பலரும் நம்ப மறுக்கின்றனர்.இந்நிலையில் ஜேஸ் லேபரீஸ் தனது பேஸ்புக் பதிவில், இதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது, எனக்கு இந்த வாய்ப்பையளித்த Cebu Pacific நிறுவனத்துக்கு நன்றி.

வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்துள்ளேன்.விமானத்தில் வேலை கிடைத்தது தான் என் வாழ்க்கையில் நான் அடைந்த பெரிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.இன்னொரு திருநங்கையான மிகி தனது பதிவில், இந்த அரிய வாய்ப்பை தன்னடக்கத்தோடு ஏற்று கொள்கிறேன்.

பிலிப்பைன்ஸில் முதல் திருநங்கை விமானப்பணிப்பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.இருவரின் பதிவுகளுக்கும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க :   ஒரு வயது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாயார்: அதிர வைக்கும் காரணம்

Related Posts

About The Author

Add Comment