குப்பைகளை கைகளால் அகற்றிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நடைப்பயணம் மேற்கொண்ட போது, கோவளம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கைகளினால் அகற்றினார்.

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி கோவளம் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில்நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது,கடற்கரைகளில் இருந்த குப்பைகளை வெறுங் கைகளினால் அள்ளி சுத்தப்படுத்தினார். சுமார் 30 நிமிடங்கள் துப்புரவு பணி மேற்கொண்ட பிரதமர் மோடிகடற்கரையில்சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியரிடம் தந்ததாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பொது இடங்களை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க :   அடங்கப்ப! உயிரிழந்த குழந்தை சுஜித்தை மீட்க ஆன செலவு எவ்வளவு?

Related Posts

About The Author

Add Comment