எச்சரிக்கும் இஸ்லாமியர்! பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தினால் யுத்தம் ஆரம்பமாகும்!

தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினை வாழ்த்தியும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தினால் முஸ்லிம்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் அமைதியாக இருந்தது போல இனிவரும் காலங்களில் அமைதி காக்கமாட்டார்கள் எதிரிகளுக்கு தக்க பதிலடிகளை வழங்குவார்கள்.

இவ்வாறு வவுனியாவிலுள்ள பள்ளிவாசலின் மௌலவியும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அசியல் வேலைத்திட்டத்தின் நெருங்கிய ஆதரவாளருமான முனாஜித் தனது முகப்புத்தகத்தில் தனது கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் அவருக்கு எதிரான பல கருத்துக்களை பலர் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஈஸ்டர் தினத்தில் இலங்கை திருநாட்டை உலுக்கிய உலகப்பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து மீள முடியாத நிலையிலிருந்து வரும் இந்நிலையில் இன்று தனது முகப்புத்தகத்தில் முஸ்லிம்கள் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஒரு முஸ்லிம் போராட முன்வரவில்லை.

அன்று வேடிக்கை பார்த்த பலர் இன்று தேசிய தௌபீக் அமைப்பின் தாக்குதலை நியாயப்படுத்தியும் தனது கருத்தினை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் இன முரண்பாடுகள் மேலும் தோற்றுவித்துள்ளது.

இதையும் படியுங்க :   எமது சொந்தங்களுக்கு பியர் பாவனையை புகட்டாதே! – யாழில் ஆர்ப்பாட்டம் (2ஆம் இணைப்பு)

Related Posts

About The Author

Add Comment