எனக்கு தெரியாமலேயே குடும்ப கட்டுப்பாடு பண்ணிடாங்க

கணவன், மனைவிக்குத் தெரியாமல் அவர்கள் சம்மதமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி அஷ்வினி. தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அஷ்வினி மீண்டும் கர்ப்பமானார்.

இதையடுத்து அவரை பிரசவத்துக்காக ராஜேஷ் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அன்று மாலையே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்கள் கழித்து செவிலியர்கள் அஸ்வினியை வேகமாக நடக்க வேண்டாம் உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்று கூறியதால் அஸ்வினி அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவமனை நிர்வாகத்தை அவர்கள் அணுகிய போது, அனுமதி பெற்று தான் செய்தோம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அஸ்வினி, குழந்தை பிறக்க அறுவை சிகிச்சைக்கு மட்டுமே தான் கையெழுத்து வாங்கினார்கள். குடும்ப கட்டுப்பாடு குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. நான் எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை என்றார்

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், இது குறித்து தலைமை மருத்துவரிடம் பேசிய போது அவர் விசாரித்தார்.

பின்னர் தவறு நடந்துவிட்டது கொஞ்சம் பொறுங்கள் என கூறினார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன்.

எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை மருத்துவமனையில் இருந்து என் மனைவியை அழைத்துச் செல்லப்போவதில்லை என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க :   காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்!!

Related Posts

About The Author

Add Comment